காப்பு – மந்திர காப்பு – 1
பிரம்மச்சரிய ஒழுக்கம் – Eternal Life Booster!
காப்பு – மந்திர காப்பு -1
காப்பு
சித்தர்கள் திருவடிக்கே சரணம்
ஓம் ஸத்குருபாதம் போற்றி!
ஓம் நவகோடி சித்தர்பாதம் போற்றி!
பிரம்மச்சரியத்தில் நிலைத்த நீடித்த சித்தர் பெருமக்கள், குருமார்கள், யோகிகள், எல்லாம் வல்ல இறையாற்றல் உடனிருந்து இந்த அரும்பணியை ஆற்ற துணை நிற்குமாறு வேண்டி,
என்னை என்றென்றும் உடனிருந்து வழிநடத்தும் குரு வேதாத்திரி மகரிஷி திருவடி கமலங்களில் என் தலைவைத்து பணிவோடு இந்நூலை துவங்குகிறேன்
மந்திர காப்பு
****************
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே 🙏
– திருமந்திரம்
*********************
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் “சிவ” வாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 🙏🙏
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 🙏🙏🙏
– சிவ வாக்கியம்
*********************
காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள
அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான
கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய்
மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் ,
பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர்
சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே ”
*********************
நந்தீசர் மூல மந்திரம்..
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே
போற்றி!”
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி
திருமூலர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி
கொங்கணர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி
வான்மீகர் மந்திரம்
ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி
கமலமுனி மந்திரம் ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
மச்சமுனி மந்திரம்
ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி
பதஞ்சலி மந்திரம்
ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி
இராமத்தேவர் மந்திரம்
ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி
தன்வந்த்ரி மந்திரம்
ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture