brahmacharya power book

சுய இன்பமும் போதை பழக்கமே! -2

பெண்களாலும் அவர்களின் மீது கொண்ட காமத்தினாலும் எவ்வளவு பெரிய பெரிய சாம்ராஜ்ஜியங்களே சரிந்தது என்று பல வரலாற்று கதைகள் நமக்கு உணர்த்துகின்றன, உண்மையில் பெண்களினால் சாம்ராஜ்யங்கள் சரியவில்லை ஆணின் மனதில் உள்ள ஏற்பட்ட காம உணர்வுகளே சிற்றின்ப மயக்கங்களே அந்த அழிவுக்கு காரணம்

கடந்த காலங்களில் ஆணும் பெண்ணும் நேரடியாக பழகும் வாய்ப்புகள் குறைவு, மேலும் வலிமை மிக்க பிரம்மச்சரிய கல்வி முறைகளால் பெரும்பாலும் ஆணும் பெண்ணும் விலகி வாழ்ந்து தன்னுடைய உயிரணுக்களை (வித்துக்களை) வித்தையாக்கி 64 கலைகளாக்கி தன்னையும் சமுதாயத்தையும் மேம்படுத்தி வாழ்ந்தனர்,

இத்தகைய சிறப்பான கால கட்டத்தில் கூட காம நோயில் சிக்கிய மனிதர்களால் சாம்ராஜ்யங்கள் சரிந்தன என்றால் தற்காலத்தில் நினைத்த மாத்திரத்தில் ஆற்றல் விரயம் தூண்டும் அறிவியல் வளர்ச்சி கண்டு நாம் எவ்வளவு எச்சரிக்கையாக வாழவேண்டும்?

ஆனால் தற்போது நாம் மிக இளம் வயதிலேயே மொபைல் போன் போன்ற கருவிகள் மூலம் தவறான இணைய தளங்களின் வாயிலாக ஆபாச விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் அமிர்தத்துக்கு இணையான நம்முடைய விந்து சக்தியை உயிர் சக்தியை அபரிமிதமாக வீணடித்து விடுகிறோம்

ஒட்டுமொத்த பூமி சரித்திரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் பலவீனமான சமுதாயம் கடந்த முப்பது வருடங்களில் அறிவியல் வளர்ச்சியால் உருவாக்கி உள்ளோம்! மேலும் இந்த சிற்றின்பத்திற்கு அடிமையாகி தவித்து வருகிறோம், இது ஒரு வகையில் போதை பழக்கத்தை விட மோசமானது என்பதை உணர வேண்டும்

முதல் முறை நம்முடைய உயிரணுக்களை விந்துவாக மாற்றி வீணாக்கும் போதே மூளை செல்களில் இன்பம் என்ற உணர்வு பதிவாகி விடுகிறது, பின் இயல்பாகவே திரும்பத் திரும்ப பல்வேறு வழிகளில் நாம் தூண்டப்பட்டு அல்லது செயற்கையாக நாமே தூண்டி அந்த நரக குழியில் விழுகிறோம்,

இதனால் தொடர்ந்து ஆற்றல் விரயம் செய்யப்படுவதால் மிகவும் பலவீனமாக எந்த சூழலையும் புரிந்து கொள்ளும் பக்குவமோ சக்தியோ இன்றி நம் வாழ்க்கை படைக்கப்பட்டதே நாம் சுயநலமாக சிற்றின்பத்தை அனுபவிக்கவே என்னும் மாயையில் மூழ்கி விடுகிறோம்

உண்மையில் சுய இன்பம் என்பது நம்முடைய இயல்பு கிடையாது, அதுவும் ஒரு போதை பழக்கமே என்பதை உணர்ந்து இது போன்ற ஒரு நிமிட சுகத்திற்காக நாம் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை இழக்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும் 🙏

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash 🙏

 

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture