பரிணாம வளர்ச்சியும் ஒழுக்கமும் -3
Prakash Blogs
உயிரின பரிணாம கோட்பாட்டின் படி, ஓரறிவு உயிரினம் முதல் ஐயறிவு விலங்குகள் வரை பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது இறுதி நிலையான மனித இனம் உருவாகி உள்ளது
இனி புதிதாக ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு எனில் அது மனிதனில் இருந்து தான் தொடங்க வேண்டும்! எங்கு ஒரு செயல் நிறைவு பெற்றதோ அந்த இடத்தில் இருந்து தானே புதிய மாற்றங்களும் துவங்கி ஆக வேண்டும்? அந்த வகையில் பரிணாம வளர்ச்சி என்பது சாதாரண மனிதனாக வாழும் நம்மிடம் தேங்கி நிற்கிறது
நம்மோடு நிறைவு பெற்று நிற்கும் இந்த பரிணாம வளர்ச்சி நம்முடைய உண்மைத்தன்மையை உணராத காரணத்தால் அடுத்த நிலைக்கு செல்லவில்லை.
இயற்கை நியதிப்படி பரிணாம வளர்ச்சி நம்மிலிருந்து உள்ளார்ந்த தேவைகள் ஆற்றல்களின் மூலம் புதிதாக தொடங்கியாக வேண்டும்,
அறிவில் தெளிந்த நம்முடைய முன்னோர்கள் மனிதகுலம் பயன்பெற மேம்பட அனைத்துக்கும் அடிப்படை ஒழுக்கமே என போதித்து வந்தார்கள்
இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் சித்தர்களும் யோகிகளும் எதிர்பாலின இன்பத்தில் மயங்காது பல்வேறு ஆன்மீக யோக சாதனைகளை அதற்கு தகுந்தாற் போல வடிவமைத்து வைத்தார்கள்.
சிற்றின்பத்தில் மயங்காது பேரின்பத்தில் நிலைத்து செல்ல வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை என போதித்தார்கள், மனதை ஒழுங்குபடுத்த பல ஆயிரம் மந்திரங்கள் வழிமுறைகளை எழுதினார்கள், உடலை மேம்படுத்த யோக பயிற்சிகளை போற்றி வளர்த்தார்கள்
கல்விமுறை, வாழ்க்கை முறை, கலாச்சாரம், பொருளாதாரம், கலைகள், ஆன்மிகம் என பல சாதனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பிரம்மச்சரிய ஆற்றலும் ஒழுக்க பழக்க வழக்கங்களும் தான் என உணர்ந்து வாழ்ந்த நம்முடைய தேசத்தில் இனி ஆயினும் நாம் பிரம்மச்சரியத்தில்
நிலைப்பது நம்முடைய உயிரை விட மேலான கடமை என உணர வேண்டும்