ஓடிக்கொண்டிருக்க பிறந்தோமா? – 4
நாம் உண்மையில் இந்த பூமியில் எவ்வாறு வாழ வேண்டும்? , ஏன் வாழ வேண்டும்? அல்லது எதற்காக வாழ வேண்டும்? ஏன் நாம் சிறிய சிறிய இன்பங்களுக்காக ஏதோ சில விஷயங்களை அடைவதுதான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ,
ஒரு குழந்தை பொம்மையை பார்த்து சலிப்படைந்து மற்றொரு பொம்மை பின் செல்வது போல் அமைதியோ தெளிவோ இன்றி வாழ்க்கை முழுதும் சலிப்பின்றி புதிய இன்பத்தை சுகத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்!
மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்றும் மற்றவர்களுக்கு முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் நம்முடைய சுயத்தை மறந்து “எடுத்தேன் பல பிறவி பிறருக்கு உழைத்தே ஏழை ஆனேன்”
என்று சித்தர்கள் பாடி வைத்தது போல பல வழிகளில் நம்முடைய ஆற்றலை அடுத்தவர்களுக்காகவே வீணாக்கி அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறோம்
ஒரு ஈசல் பூச்சி வெளிச்சத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருப்பது தான் இன்பம் என்று நினைத்து வெளிச்சத்தின் பின்னே சென்று மறைவது போல நாமும் சிறிய சிறிய இன்பங்களே வாழ்வின் லட்சியம் என இன்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்
வாழ்வை பற்றி சரியான புரிதலோ தெளிவோ இன்றி ஒருவரை பார்த்து மற்றொருவர் என எறும்பானது ஒன்றன் பின் ஒன்றாக செல்வது போல தெளிவின்றி சென்று கொண்டு இருக்கிறோம், இப்படியே வாழ்வை பற்றிய புரிதல் இன்றி சென்று கொண்டிருந்தால் இறுதியில் பிறப்பின் நோக்கம் தான் என்ன?
இந்த பூமியில் வாழ்வதற்காக பிறந்தோமா அல்லது ஏதேனும் ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க பிறந்தோமா என்ற தெளிவு பெறுவதற்கு முன்பாகவே பலரின் வாழ்வும் முடிந்து விடுகிறது, நம் எதிர்கால சந்ததிக்கு இந்த முழுமையடையாத சமுதாயத்தை தான் நாம் விட்டு செல்ல வேண்டுமா?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் நமக்கு வகுத்து அளித்த வழிமுறைகளை மறந்து அல்லது மறைக்கப்பட்டு வாழும் நாம் இப்போது சிற்றின்பமே வாழ்க்கை என்று மயங்கி நிற்கும் சமுதாயமாக மாறி விட்டோம்
இந்த அனைத்து கேள்விகளுக்கும் நமக்குள்ளிருந்து பதிலளிக்க எல்லாம் வல்ல இறைவன் இன்னும் எவ்வளவு நாள் தான் காத்திருக்க வேண்டும்?
அனைத்து கேள்விகளுக்குமான பதில் , அனைவருக்குமான பாதை நாம் பிரம்மச்சரியத்தில் நிலைத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர வேண்டும் …
உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை போற்றி நம் பயணத்தை உறுதியோடு தொடர்வோம்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture