விந்து சக்தியின் பெருமை: உடல், மனம், ஆன்மா மேம்பாட்டிற்கான ஒரு வழி

விந்து சக்தியின் பெருமை: உடல், மனம், ஆன்மா மேம்பாட்டிற்கான ஒரு வழி

“அண்டத்தில் சிவமாக இருப்பவன் நம்முடைய உடலில் உயிரெனப் போற்றப்படுகிறான்”

நாம் உண்ணும் உணவானது (அது எந்த உணவாயினும்) முதலில் ரசமாகி, ரத்தமாகி, தசை ஆகி, எலும்பாகி, எலும்பு மஜ்ஜையாகி, பின்பு மூளையாகி… மேலும் பஞ்ச பூதங்கள், பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் ஈர்த்த பிறகே நம் உடலில் உள்ள உயிரணுக்களாகவும் உயிர் சக்தியாகவும் மாற்றம் பெறுகிறது. இதனையே நம் முன்னோர்கள் பிராணன் என்று அழைத்தார்கள். இந்த போக்கிஷமான உயிராற்றல் நாம் காம உணர்வு பெற்று இனப்பெருக்க செயலில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்து சக்தியாகவும் பெண்களுக்கு நாத சக்தியாகவும் வெளிப்பாடு அடைகிறது.


உயிரணுக்களின் காந்த ஆற்றல் மற்றும் அதன் முக்கியத்துவம்

உயிரணுக்களின் சுழற்சியும் காந்த ஆற்றல் உருவாக்கமும்

இனப்பெருக்க காலத்தில் ஆணின் விந்துவில் பல லட்சம் உயிரணுக்கள் நீந்தி பெண்ணின் கருப்பையை அடைகிறது. அதில் அனைத்து உயிரணுக்களும் அழிக்கப்பட்டு, முழுமையான தகுதியுடைய ஒரே ஒரு உயிரணு மட்டுமே பிழைத்து, பல இன்னல்களுக்கு பிறகு மனிதனாகிறது. எந்த ஒரு அணுவும் தன்னைத்தானே சுழன்று கொண்டே இருக்கும் என்பது அறிவியல் உண்மை. எந்த ஒரு பொருளும் தன்னை தானே சுழலும்போது அலை இயக்கம் உண்டாகிறது (உதாரணமாக வீட்டில் இருக்கும் காற்றாடி சுழலும்போது காற்று வெளிப்படுவது போல). அதுபோலவே, நம்முடைய உடலில் உயிரணுக்கள் உடல் முழுவதும் பரவி, தன்னைத்தானே சுழலுவதால், அவை காந்த ஆற்றலாக மாற்றம் அடைகிறது.

“உயிரணுவிலிருந்து காந்த ஆற்றல் வெளிப்பாடு அடைவதை நம்முடைய இரு கைகளையும் ஆழ்ந்த கவனத்தில் சேர்த்து பிரித்து பார்ப்பதன் மூலமாக எளிதில் உணரலாம்”

ஜீவகாந்த ஆற்றலின் வெளிப்பாடுகள்

நம்முடைய ஜீவனிலிருந்து உற்பத்தி ஆகும் இந்த காந்த ஆற்றலை நாம் ஜீவகாந்த ஆற்றல் என்று அழைக்கிறோம். இந்த காந்த ஆற்றலே நம்முடைய உணர்வாகவும், மனமாகவும், மேலும் நம்முடைய ஐம்புலன்கள் வழியாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளாகவும் வெளிப்பாடு அடைகிறது. ஒரு மனிதன் வாழ்வில் முழுமையாக வெற்றியடைய, தன்னுடைய உயிராற்றலை (விந்து சக்தியை) விரயம் செய்யாது, எந்த அளவிற்கு தனக்குள்ளாக இறுத்தி, பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தி முழுமை செய்கிறானோ, அந்த அளவிற்கு வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் மகத்தான வெற்றி அடைகிறான்.

இதையே “குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் “ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் ரகசியம் என்பது அவனிடமுள்ள விந்து சக்தியின் அளவையும் அதன் தரத்தையும் பொறுத்து அமைகிறது” என்கிறார். இந்த ஞானம், விந்து சக்தி பாதுகாப்பு மற்றும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


விந்து சக்தியின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு

உயர்மதிப்புடைய விந்து சக்தியின் உற்பத்தி

நம்முடைய சித்தர்கள் மற்றும் ஆயுர்வேத மரபின்படி, ஒரே ஒரு சொட்டு விந்து சக்தியானது உற்பத்தியாக 40 முதல் 120 சொட்டு இரத்தம் வரை தேவையாகிறது அல்லது அதற்கான ஆற்றல் வரை உடலானது செலவழிக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும், விந்து சக்தியானது உற்பத்தியாக உடலில் உள்ள மிகத் தரமான இரத்தம் மற்றும் உச்சகட்ட ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய உயர் மதிப்புடைய நம்முடைய உயிர் மூலமான விந்து சக்தியை காப்பது நம்முடைய வாழ்வில் உயிரினும் மேலான கடமையாக கொள்ள வேண்டும்.

விந்து சக்தியின் புனிதத்துவமும் நவீன அறிவியலும்

ஒவ்வொரு சொட்டு விந்தினுள்ளும் பல லட்சம் கோடி மனித விதைகள் இருப்பதை நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட இத்தகைய மகத்தான கொடையை, நம்முடைய சிற்றின்பத்துக்காகவும், சுய இன்பத்துக்காகவும் வீண் செய்யலாமா? இது ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்த்துகிறது.

ஒரு கோழி முட்டையானது பொரிந்து குஞ்சாக வெளிப்பட ஒரு மாதம் ஆகிறது. இதேபோல, கோடிக்கணக்கான மனித உயிர்களானது விந்துவாக மாறி பெண்ணின் கருப்பையை அடைந்து, அழிக்கப்பட்டு, ஒரே ஒரு உயிரணு சிசுவாக சில மாதங்களில் குழந்தையாக வெளிப்படுகிறது. இத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த உயிரணுக்களின் ஆற்றலை உணராது, நம்முடைய வாரிசுகளை நாமே சில நொடி இன்பத்துக்காக அழிப்பது நியாயம்தானா?


உயிராற்றல் விரயமும் அதன் விளைவுகளும்

வரலாற்றுப் படிப்பினைகளும் நமது பொறுப்பும்

உலகப் போர்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் தன்னுடைய உயிரினை தியாகம் செய்தார்கள் என நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் அதைவிட பல மடங்கு நம் உயிரணுக்களை, நம் விதைகளை, நம்முடைய வாரிசுகளை இனப்பெருக்க செயல்பாடுகளிலும், சுயஇன்பத்திலும் உண்மை உணராது அழிக்கிறோம். இந்த உயிராற்றல் விரயம் தனிப்பட்ட மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு ஒரு பெரும் தடையாகும்.

போதைப்பழக்கம் மற்றும் சுய இன்பத்தின் ஆபத்துகள்

உயிரானது உடலில் இருந்து வெளியேறிய அடுத்த நிமிடத்திலேயே உடல் அழுகத் துவங்குகிறது. அவ்வளவு மதிப்புமிக்க உயிரின் சக்தியை, சாதாரண போதைப்பழக்கம் போன்ற இந்த சுய இன்பத்தில் தானா நாம் வீணாக்க வேண்டும்? இது நம் உயிராற்றலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.


பிரம்மச்சரியம்: வெற்றியும் விழிப்புணர்வும்

உண்மையான ரகசியம்: உணர்ந்து பிரம்மச்சரியத்தில் நிலைத்தல்

நம்முடைய உண்மை ரகசியத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது, அதை நாம் ஆழமாக உணரவேண்டும். உணர்ந்தால் மட்டும் போதுமா? உணர்ந்து பிரம்மச்சரியத்தில் நிலைக்க வேண்டும். காமம் எனும் இந்த கொடும்பாவி நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அழித்துவிடும் என்பதை உணர்ந்து, விழிப்போடு வாழ்வதே மதிப்புமிக்க மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை. பிரம்மச்சரியம் மற்றும் விந்து சக்தி பாதுகாப்பு ஆகியவை ஒருவரின் வாழ்வில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்.


எங்கள் பிரம்மச்சரிய யோகா பயிற்சி திட்டம் பற்றி

Dhavayoga.com வழங்கும் ஆன்லைன் பிரம்மச்சரிய யோகா பயிற்சி திட்டத்தின் நன்மைகள்

Dhavayoga.com வழங்கும் ஆன்லைன் பிரம்மச்சரிய யோகா பயிற்சி திட்டம் உடல், மனம், ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான கலவையை வழங்குகிறது. இந்த திட்டம் தனிநபர்களுக்கு பிரம்மச்சரியத்தின் கோட்பாடுகள் மற்றும் விந்து சக்தி பாதுகாப்பு பயிற்சிகள் மூலம் முழுமையான மற்றும் சமநிலையான வழிகாட்டுதலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • விரிவான பாடத்திட்டம்: இந்தத் திட்டம் பிரம்மச்சரியத்தின் வரலாற்றுப் பின்னணி, ஆன்மீக முக்கியத்துவம், மற்றும் அன்றாட வாழ்வில் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது பாரம்பரிய யோகப் பயிற்சிகளுடன் நவீன ஆரோக்கிய அணுகுமுறைகளை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *