brahmacharya power book

ஆவதும் அழிவதும் பிரம்மச்சரியத்தில் – 9

மிகச்சிறந்த கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் உடைய நாடுகளின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த சமுதாயம் அக்காலக்கட்டங்களில் பிரம்மச்சரிய கல்விக்கும் நம்முடைய உயிரணுக்களை காமத்துக்காக விரயம் செய்யாது தன்மாற்றம் செய்து தன்னை வலிமை படுத்திக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததை மிக எளிதாக உணரலாம்,

 

பிரம்மச்சரியத்தை மறந்து காமத்தில் திளைத்த அரசாங்கங்கள் அதாவது அந்தப்புரம் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மன்னர்கள் அந்தந்த தலைமுறையிலேயே அழிந்து அற்ப ஆயுளோடு மரணித்த வரலாறுகள் அனேகம்

 

ஸ்பார்டன் என்ற ஒரு தேசத்தில் அவர்கள் தன்னுடைய பிரம்மச்சரிய சக்தியை முழுமையாக வீரத்திற்கு அர்ப்பணித்து உலகப் புகழ் பெற்று விளங்கினார்கள்,

நம்முடைய பாரத தேசத்தில் பிரம்மச்சரிய ஆற்றல்கள் அனைத்தும் 64 கலைகளாக  மலர்ந்தது

 

ராஜ்ஜியங்களை இழந்த மன்னர்கள் பிரம்மச்சரியத்தை துணையாக கொண்டு  இழந்த ராஜ்ஜியங்களை மீட்டெடுத்த வரலாறுகள் பாரத தேசத்தில் அதிகம்

 

பிரம்மச்சரியத்தின் மதிப்பை உணர்ந்த மனிதன் பிற உயிர்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவைகளின் சுதந்திரத்தையும் உரிமையையும் மதித்து வாழும் பண்பை இயல்பிலேயே பெற்றிருந்தான்

 

பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க துவங்கிய மனிதனுக்கே இயற்கையோடு இயைந்து வாழும் சக்தி அதிகம் என்பதால், பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும்  வலிமை சேர்க்கும் உயிரினமாக அக்காலத்தில் மனித இனமும் இருந்தது

 

தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை பெருமையை உணர்ந்த மனிதன் ஒழுக்கம் வாய்ந்த மனிதனாக பெண்களுக்கும் மதிப்பளிக்கும் மனிதனாக இருக்க இயலும், உண்மையாக பெண்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த மனிதரும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்க்கை நடத்துவர்