brahmacharya power book

தற்கால கல்விமுறை 

 

தற்காலத்தில் அறிந்தோ அறியாமலோ  நம் முன்னோர்களின் கல்வி முறை பெரும்பாலும் துடைத்து அழிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் இளைய தலைமுறை தன்னை மேம்படுத்திக் கொள்ளும்  கலைகளில்  தேர்ச்சி பெற இயலாது பெரும்பாலும் அந்நிய நாட்டினர் சிற்றின்ப வாழ்க்கை, தேவையற்ற போட்டி மற்றும் பணம் தான் வாழ்க்கை அவசியம் என்னும் கட்டாய கல்வி முறையில் சிக்கி தவிக்கிறோம்

 

பிரம்மச்சரியத்தை மறந்த கல்வி முறையினால்,   போதை பழக்கத்திற்கு உட்பட்டோர் நாட்கள் செல்ல செல்ல பலவீனம் அடைவது போல மாணவர்கள் வயது செல்ல செல்ல தன்னம்பிக்கை குன்றி உண்மையான வாழ்க்கைக்கும்  அமைதிக்கும் பயன்படாத குப்பைகளால் நிரப்பப்பட்டு  தன்னுடைய ஆற்றல்களையும் பலத்தையும் அறியாது வாழ்ந்து வருகிறார்கள்

 

தற்காலங்களில் ஆண்களும் பெண்களும் தங்கள் முழுமையான தனிதிறனை  அறியாத காரணத்தினால் வெளிநாட்டு மயக்க கல்வி முறையில் வளர்க்கப்பட்டு  குடும்ப உறவுகளிலும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகிறது  சுயநல மிகுதியால் திருமண பிரிவுகள் சாதாரணமாகி அடுத்த தலைமுறை குழந்தைகளின் வாழ்வாதாரமும் பாதிப்பு அடைகிறது

 

ஒவ்வொருவரும் இயற்கையில் தன்னுடைய கடமையை உணர்ந்து மற்றவருக்கு மதிப்பு கொடுத்து வாழும்போதே மனித பிறவி அர்த்தமுள்ளதாகும் அதற்காக நம் முன்னோர்களால் வகுக்கப்பட்ட கல்வி முறையே பிரம்மச்சரிய கல்வி முறை

 

முன்னோர்கள் கல்வி முறையில் தீர்வு 

 

இன்பத்தை நோக்கி செல்வதே வாழ்க்கை எனக்கொண்டால் மனித இனம் தானாகவே தேய்பிறையாக அழிவு பாதைக்கு சென்று விடும் , இதை உணர்ந்து நம் முன்னோர்கள் நம்மை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகையில் கல்வி முறையை வடிவமைத்திருந்தார்கள் , இக்கல்வி முறையில் பிரம்மச்சரியமே  அனைத்து ஞானத்துக்கும் ஆதாரம் என்பதால் கல்வி கற்கும் காலத்தையே பிரம்மச்சரிய காலம் என அழைத்தார்கள்

 

நம் பண்டைய கலாச்சாரத்தில் 12 வயது கடந்த அனைவரும் கல்வி கட்கும் காலத்தில்  கட்டாயம் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வாழ வேண்டும் அதற்காகவே ஒழுக்க பழக்க வழக்கங்கள் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன

 

பிரம்மச்சரிய காலத்தில் நம்முடைய  உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றல் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் 64 கலைகள் தோற்றுவிக்கப்பட்டு மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறும் வகையில் கல்வி முறையை வகுத்தார்கள்

 

பிரம்மச்சரிய காலத்தில் ஆற்றலை முழுமையாக திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதாலேயே மாணவர்களை குடும்பத்தில் இருந்து விலக்கி குருகுலம் போன்ற இயற்கை சூழ்நிலையில் எதிர்பாலின கவர்ச்சி தோன்றாத வண்ணம் பாதுகாத்தார்கள்

 

இதன் காரணமாக பல்வேறு கலைகளும் வளர்ச்சி பெற்று தன்னை மேம்படுத்துவதிலேயே பெரும்பாலான கவனம் இருந்த காரணத்தால் இயற்கையும் காக்கப்பட்டு அனைத்து உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்து உதவி வாழும் வலிமை மிக்க இன்பம் பெருகும் சமுதாயம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்புடன் உலகுக்கே வழிகாட்டும் வகையில் நம் பாரத தேசம் திகழ்ந்தது, அதற்கு நம் தமிழ் முன்னோர்களும் துணை நின்றார்கள்

 

கிராமங்களில் ஒரு கூற்று உண்டு அதாவது புதிதாக பிறந்த நாய் குட்டியை கட்டி போட கூடாது சுதந்திரமாக விளையாட விட வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அந்த நாய் குட்டியானது கால்கள் வலிமை அடைந்து முழுமையான வளர்ச்சி அடையும்

 

அது போலவே நாம் குழந்தைகளை தாய் தந்தையர், தாத்தா பாட்டி உறவுகளின்  அரவணைப்பில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து பதின்ம வயது வரை அதாவது பத்து வயது வரை நன்கு விளையாட விட்டு வளர்க்க வேண்டும்

 

அதன் பிறகு ஆண் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து பிரம்மச்சரிய குருகுலங்களில்  சகல கலைகளையும் போதித்து வளர்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் தனக்கு விரும்பிய துறையில் திறன் மேம்பாடு அடைந்து சமுதாயம் பயன்படும்படி வளர்ந்து வருவார்கள்

 

மேலும் மாணவர்களை போல மாணவிகள் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அவர்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வாழ செல்வதால் அது வரையில் பெற்றோரின் அரவணைப்பில் குடும்ப நிர்வாகம் மற்றும் சகல கலைகளையும் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கலாம்

 

இதன் மூலமாக குடும்ப சமநிலை பாதுகாக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயம் வலிமை மிக்க சமுதாயம் உருவாக்க வாய்ப்பு உண்டாகும்

 

இளைஞர்கள் இருபத்தைந்து வருடம் வரை பிரம்மச்சரிய வாசம் புரிந்து வருவதால் அவர்கள் திருமணம் முடிந்து தன் தாய் தந்தையாரோடு நம்பி வந்த வாழ்க்கைத்துணையை காத்து அரவணைத்து வாழ வேண்டியது அவர்கள் கடமையாகும்

 

இதுவே நம் முன்னோரின் கல்வி முறையாகும் தடம் பிறழாத வாழ்க்கை நெறியாகவும் இருந்தது

 

இந்த முறையான பல பல ஆயிரம்  ஆண்டுகள் நிரூபிக்கப்பட்ட நம்முடைய முறையான   கல்வி முறைக்கு வாய்ப்பும் அதிகாரமும் இருக்கும்  அனைவரும் உதவ  முன்வந்தால் நிச்சயம் வலிமை மிக்க சமுதாயம் மீண்டும் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

brahmacharya power book

போட்டிகள் நிறைந்த இந்த கலியுக வாழ்வில் வெற்றி அடைய செய்ய அபரிமிதமான ஆற்றலும் அறிவும் இறைவனின் துணையும் நமக்கு தேவைப்படுகிறது

 

நம்முடைய உடலில் உணவின் மூலமும் பஞ்ச பூதங்களின் மூலமும்  உற்பத்தி ஆகும் ஆற்றலானது பல்வேறு மாற்றங்களுக்கு பின்பு இறுதியில் உயிரனுக்காளாக மாற்றம் பெறுகிறது

 

இவ்வாறு மாற்றம் பெரும் உயிரணுக்கள் முறையான கல்வியால் மேம்படுத்தாவிடில், பெண்களோடு இணைந்து வாழும் உலகில் இயல்பாக விந்து சக்தியாக மாற்றம் பெற்று விடுகிறது,  விந்து சக்தியாக மாற்றம் பெற்ற அந்த ஆற்றலானது  மூலாதார சக்கரத்தில், இடுப்பு பகுதியில்  சூழ்ந்து இருப்பதால்  காமம், போட்டி, பொறாமை, வஞ்சம், கவலை, பயம் போன்ற உணர்வுகளும்  அது சார்ந்த கீழ்நிலை  எண்ணங்களும் அதிகமாக வர  காரணமாகிறது

 

கீழ்நிலை எண்ணங்கள் என்பது எப்போதும் எதிரபாலினத்தோரை சார்ந்தே வாழ்வது, அடுத்த மனிதர்களிடம் சார்ந்து இருப்பது, சுய சிந்தனை அற்று இருப்பது, நினைவு திறன் குறைந்து இருப்பது போன்ற பலவீனத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது

 

நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் அல்லது நாம் மேற்கொள்ளும் உறுதிப்பாடும் சங்கல்பமும் முதலில் நம்முடைய மூளையின் மூலம் காந்த உடலின் ஜீவகாந்த களத்தில் பதிவாகிறது பின்பு அது நம்முடைய கரு மையத்தில் அதாவது உயிரணுக்களில் பதிவாகிறது

 

நாம் சுய இன்பத்தாலோ, இனப்பெருக்க செயல்பாடுகளாலோ  உயிரணுக்களை வீணாக்க தயாராகும் போது உடலானது தன்னிடம் உள்ள அதி வலிமை வாய்ந்த அனைத்து உயிராணுக்களையும் அடுத்த தலைமுறை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  அனுப்பி வைத்து விடுகிறது

 

இதனால் நாம் மிகவும் பலவீனம் அடைந்து நினைத்த எந்த எண்ணத்தையோ  கொடுத்த எந்த வாக்குறுதியையோ நிறைவேற்றும் சக்தி குறைந்த மனிதர்களாக மாற்றமடைகிறோம்

 

ஆறு ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு ஒரு நொடியும் புதிய புதிய நீர் திவலைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது, அது போலவே நம்முடைய மனம் நம்மோடு இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு நொடியும் உடலில் இருக்கும் உயிரணுக்களின் சூழற்சியினால் உற்பத்தியாகும் காந்த ஆற்றல் மனமாக மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது

 

இதனால் ஆற்றின் பிரவாகம் போல புதிது புதிதாக உற்பத்தியாகும் எண்ணங்கள் பழைய லட்சியங்களின் இருப்பை பலவீனம் அடைய செய்து விடுகிறது,  பழைய உயிரணுக்கள் விந்து சக்தி மூலமாக வீணாக்குவதன் மூலமாக நாம்   மன உறுதி அற்ற மனிதனாக மாற்றம் அடைகிறோம்

 

மன உறுதி அற்ற மனிதன் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலுமா?  பெரிய பெரிய லட்சியங்களை கொண்ட மனிதர்கள் பிரம்மச்சரியத்தில் நிலைத்த காரணத்தினாலேயே அதை சாதிக்க முடிந்திருக்கிறது

 

மூவுலகையும் வென்ற ராவணனின் மகனான இந்திரஜித்தை  வீழ்த்த லட்சுமணன் பன்னிரண்டு வருட பிரம்மசரிய வாழ்க்கையே துணை நின்றது

 

உயர்ந்த லட்சியங்களை அடைய துடிக்கும் மனிதனுக்கு பிரம்மசரியத்தை விட உற்ற துணை வேறெதுவும் இல்லை

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

brahmacharya power book

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத் தனையது உயர்வு”

 

திருவள்ளுவர் மனதின் பெருமையை உணர்த்த வாழ்வை உயர்த்த எவ்வளவு அழகாக இந்த  குரளில் உணர்த்தியுள்ளார்! நம் மனதின் உயர்வு எதுவோ அதுவே நம்முடைய வாழ்வின் உயர்வு

 

இதில் இன்னொரு மிகப்பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது மனதின் உயர்வு என்றால் பலரும் வெறும் எண்ணங்களின் உயர்வு என்றே தவறாக எண்ணிக் கொண்டுள்ளனர்!

 

எண்ணங்களின் உயர்வு என்பது சிறப்பு தான் சரிதான் ஆனால் அந்த எண்ணங்களுக்கான வலிமை என்பது மிக முக்கியம்  அது தான் உண்மையான உயர்வு,

 

உயர்வான எண்ணங்கள் வைத்திருந்தாலே ஒருவன் வலிமை அடைந்து விட முடியாது, அப்படி எனில் மன வலிமை எவ்வாறு பெறுவது எப்படி?  எண்ணங்களுக்கும் மனதுக்கும் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?

 

உதாரணமாக நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வெளிச்சம் தெளிப்பானின்(Tourch  light) உள்ளே   பேட்டரி உள்ளது அதில் ஒளிரும் விளக்கும் உள்ளது!  ஆனால் அந்த பேட்டரியில் ஆற்றல் இருந்தால்தானே அது பிரகாசமாக நீண்டதூரம் எரியும்?

 

அதுபோலவே உள்ளத்தனையது உயர்வு என்று திருவள்ளுவர் கூறுவது உள்ளத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்ற கருத்தும் பொருந்தும் அல்லவா?

 

சரி நம்முடைய மனமானது எப்படி இயங்குகின்றது என்று ஆழ்ந்து சிந்திப்போம்

 

நாம் உண்ணும் உணவானது பல்வேறு தன் மாற்றங்கள் அடைந்து பல்வேறு கட்டங் களுக்குப் பிறகு உயிர் அணுக்களாக மாறுகிறது ஒவ்வொரு அணுவும் அதன் இயல்பு என்பது தன்னைத் தானே சுழன்று கொண்டிருப்பது ஓரணு தன்னைத்தானே வேகமாக சுழலும் போது அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் காந்த ஆற்றல் எனப்படுகிறது

 

எவ்வாறெனில் ஒரு காற்றாடி ஆனது வேகமாக சுழலும் போது அதிலிருந்து காற்று வெளிப்படுவதை போல

இதுபோலவே நம்மால் அபரிமிதமாக உற்பத்தி ஆகும் நம் உயிரணுக்கள் சுழன்று காந்த ஆற்றல் வெளிப்படும் பொழுது அந்த காந்த ஆற்றலானது கண்களின் வழியாக பார்வையாகவும், மூக்கின் வழியாக மணமாகவும், வாயின் வழியாக சுவையாகவும் சத்தமாகவும். காதின் வழியாக  கேட்கும் திறன் ஆகவும், உடலில் வலி மற்றும் உணர்வுகளாகவும், மனதின் வழியாக எண்ணங்கள் ஆகவும் வெளிப்படுகிறது

 

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் மனதிற்கான ஆற்றல் நம்முடைய உயிரணுக்களில் இருந்து வெளிவருகிறது கிடைக்கிறது என்று கொள்ளலாம்

 

மனதிற்கான ஆற்றல் உயிரணுக்களில் இருந்து வருகிறது என்றால் அந்த உயிரணுக்களை நாம் இனப்பெருக்க செயல்பாடுகளிலும் சுய இன்பத்தில்  விந்து சக்தியாக மாற்றி வெளியேற்றி விட்டால் நம் மனதில் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?

 

சில நிமிட இன்பத்திற்காக நாம் இப்படி உயிராற்றலை வீணாக்கி விடுவதினால் சிறிது காலம் இன்பமாக இருக்கலாம் ஆனால் உண்மையான வலிமைக்கு எங்கே செல்வது?

 

விந்து சக்தியாகிய உயிர் ஆற்றலை நாம் வீணாக்கிய உடன் உடலானது பலவீனமாக இருப்பதையும், மனம் தளர்ந்து விடுவதையும் இயல்பாக  ஒவ்வொரு ஆண்மகனும் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும் இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!

 

விவேகானந்தர் கூறுவார் நாம் வலிமை அடைய இந்த உலகத்தில் பிறந்து உள்ளோம் என்று!  ஆனால் நாம் வலிமை அடைந்து கொண்டிருக்கிறோமா?

 

பிரம்மச்சரியத்தில் நிலைக்க நிலைக்க வலிமையானது படிப்படியாக நம் மனதிற்கு உற்ற துணையாக வந்து சேரும்

 

நான் தியானம் செய்கிறேன் தவம் செய்கிறேன் எனக்கு மனவலிமை கண்டிப்பாக கிடைத்து விடும் அல்லவா பிரம்மசரியம் அவசியம்தானா என்று பலர் கேட்கிறார்கள்?

 

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக கூறுவார் நாம் எண்ணும் எண்ணங்கள் நம்முடைய இலட்சியங்கள் நாம் பார்க்கும் விஷயங்கள் கேட்கும் விஷயங்கள் மற்றும் ஐம்புலன்கள் வழியாக நாம் உணரும் அனைத்துமே நம்முடைய காந்தத்தில் பதிவாகி நம்முடைய கருமையத்தில் சென்று ஒரு பிளாக் பாக்ஸ் விமானத்தில் இருப்பதைப் போல பதிவாகிறது என்று கூறுவார்!

 

அவ்வாறு நம்முடைய எண்ணங்கள், நம்முடைய விந்து சக்தியின் மூலமான உயிரணுக்களில் கருமையத்தில் பதிவாகிறது என்றால் அதை நாம் விந்து சக்தியாக வீணடித்து விடும்பொழுது அவ்வாறு பதிவான அனைத்து எண்ணங்களும்  மறைந்து பலவீனம் அடைந்து விடும்  அல்லவா?

 

இதுதான் நம்முடைய இளைஞர்கள் தற்காலத்தில் அனுபவித்து வருகிறார்கள் அதாவது பிரம்மச்சரியத்தை உணர்த்தாத கல்வி முறையில் நாம் ஒருமுறை ஒரு பக்கம் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறோம் மற்றொரு பக்கம் உயிரணுக்களை வீணாக்கி கொண்டே இருப்பதனால் நாம் கற்ற கல்வியானது நமக்குள்ளே பதியாமல் அது ஓட்டைப் பானையில் ஊற்றும் தண்ணீரை போல ஒழுகி வீணாகிக் கொண்டிருக்கிறது கல்வி நிறுவனங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது மாணவர்களுக்கான அறிவியல் தளங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன ஆனால் ஒருவரும் அதனைத் தன் மனதில் நிறுத்தி மேம்பாடு அடைய இயலவில்லை

 

தியானம் தவம் செய்யும் போதும் இதே நிலைமை தான் நாம் பெற்ற வரங்கள் நாம் ஈட்டும் செல்வங்கள் அனைத்துமே விந்து சக்தி வழியாக அடுத்த தலைமுறைக்கு உடலானது கொண்டு செல்கிறது அதை முறையற்று வீணாக்கிவிட்டால் யாருக்கு என்ன பலன்?

 

ஆகவே சகோதரர்களே நாம் தியானத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றாலும் கல்வியில் வெற்றியடைய வேண்டும் என்றாலும் மனதில் வலிமை அடைய வேண்டுமென்றாலும் வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்றாலும் நமக்கு இருக்கும் மிகச் சிறந்த மிக உயரிய ஆயுதம் ஈடுஇணையற்ற ஆயுதம் நம்முடைய உயிரணுக்களை பிரம்மச்சரிய வழியில் பாதுகாப்பதன் மூலமும் அதனை முறையான சித்தர் பயிற்சிகளால் நிலைப்படுத்துவதன் மூலமுமே உண்மையான சாத்தியம்!

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture