பிரம்மச்சரிய ஒழுக்கம் – Eternal Life Booster!

தற்கால கல்விமுறை 

 

தற்காலத்தில் அறிந்தோ அறியாமலோ  நம் முன்னோர்களின் கல்வி முறை பெரும்பாலும் துடைத்து அழிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் இளைய தலைமுறை தன்னை மேம்படுத்திக் கொள்ளும்  கலைகளில்  தேர்ச்சி பெற இயலாது பெரும்பாலும் அந்நிய நாட்டினர் சிற்றின்ப வாழ்க்கை, தேவையற்ற போட்டி மற்றும் பணம் தான் வாழ்க்கை அவசியம் என்னும் கட்டாய கல்வி முறையில் சிக்கி தவிக்கிறோம்

 

பிரம்மச்சரியத்தை மறந்த கல்வி முறையினால்,   போதை பழக்கத்திற்கு உட்பட்டோர் நாட்கள் செல்ல செல்ல பலவீனம் அடைவது போல மாணவர்கள் வயது செல்ல செல்ல தன்னம்பிக்கை குன்றி உண்மையான வாழ்க்கைக்கும்  அமைதிக்கும் பயன்படாத குப்பைகளால் நிரப்பப்பட்டு  தன்னுடைய ஆற்றல்களையும் பலத்தையும் அறியாது வாழ்ந்து வருகிறார்கள்

 

தற்காலங்களில் ஆண்களும் பெண்களும் தங்கள் முழுமையான தனிதிறனை  அறியாத காரணத்தினால் வெளிநாட்டு மயக்க கல்வி முறையில் வளர்க்கப்பட்டு  குடும்ப உறவுகளிலும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகிறது  சுயநல மிகுதியால் திருமண பிரிவுகள் சாதாரணமாகி அடுத்த தலைமுறை குழந்தைகளின் வாழ்வாதாரமும் பாதிப்பு அடைகிறது

 

ஒவ்வொருவரும் இயற்கையில் தன்னுடைய கடமையை உணர்ந்து மற்றவருக்கு மதிப்பு கொடுத்து வாழும்போதே மனித பிறவி அர்த்தமுள்ளதாகும் அதற்காக நம் முன்னோர்களால் வகுக்கப்பட்ட கல்வி முறையே பிரம்மச்சரிய கல்வி முறை

 

முன்னோர்கள் கல்வி முறையில் தீர்வு 

 

இன்பத்தை நோக்கி செல்வதே வாழ்க்கை எனக்கொண்டால் மனித இனம் தானாகவே தேய்பிறையாக அழிவு பாதைக்கு சென்று விடும் , இதை உணர்ந்து நம் முன்னோர்கள் நம்மை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகையில் கல்வி முறையை வடிவமைத்திருந்தார்கள் , இக்கல்வி முறையில் பிரம்மச்சரியமே  அனைத்து ஞானத்துக்கும் ஆதாரம் என்பதால் கல்வி கற்கும் காலத்தையே பிரம்மச்சரிய காலம் என அழைத்தார்கள்

 

நம் பண்டைய கலாச்சாரத்தில் 12 வயது கடந்த அனைவரும் கல்வி கட்கும் காலத்தில்  கட்டாயம் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வாழ வேண்டும் அதற்காகவே ஒழுக்க பழக்க வழக்கங்கள் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன

 

பிரம்மச்சரிய காலத்தில் நம்முடைய  உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றல் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் 64 கலைகள் தோற்றுவிக்கப்பட்டு மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறும் வகையில் கல்வி முறையை வகுத்தார்கள்

 

பிரம்மச்சரிய காலத்தில் ஆற்றலை முழுமையாக திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதாலேயே மாணவர்களை குடும்பத்தில் இருந்து விலக்கி குருகுலம் போன்ற இயற்கை சூழ்நிலையில் எதிர்பாலின கவர்ச்சி தோன்றாத வண்ணம் பாதுகாத்தார்கள்

 

இதன் காரணமாக பல்வேறு கலைகளும் வளர்ச்சி பெற்று தன்னை மேம்படுத்துவதிலேயே பெரும்பாலான கவனம் இருந்த காரணத்தால் இயற்கையும் காக்கப்பட்டு அனைத்து உயிர்களும் ஒன்றுக்கொன்று ஒத்து உதவி வாழும் வலிமை மிக்க இன்பம் பெருகும் சமுதாயம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்புடன் உலகுக்கே வழிகாட்டும் வகையில் நம் பாரத தேசம் திகழ்ந்தது, அதற்கு நம் தமிழ் முன்னோர்களும் துணை நின்றார்கள்

 

கிராமங்களில் ஒரு கூற்று உண்டு அதாவது புதிதாக பிறந்த நாய் குட்டியை கட்டி போட கூடாது சுதந்திரமாக விளையாட விட வேண்டும் அவ்வாறு செய்தால் தான் அந்த நாய் குட்டியானது கால்கள் வலிமை அடைந்து முழுமையான வளர்ச்சி அடையும்

 

அது போலவே நாம் குழந்தைகளை தாய் தந்தையர், தாத்தா பாட்டி உறவுகளின்  அரவணைப்பில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து பதின்ம வயது வரை அதாவது பத்து வயது வரை நன்கு விளையாட விட்டு வளர்க்க வேண்டும்

 

அதன் பிறகு ஆண் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து பிரம்மச்சரிய குருகுலங்களில்  சகல கலைகளையும் போதித்து வளர்க்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் தனக்கு விரும்பிய துறையில் திறன் மேம்பாடு அடைந்து சமுதாயம் பயன்படும்படி வளர்ந்து வருவார்கள்

 

மேலும் மாணவர்களை போல மாணவிகள் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அவர்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வாழ செல்வதால் அது வரையில் பெற்றோரின் அரவணைப்பில் குடும்ப நிர்வாகம் மற்றும் சகல கலைகளையும் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கலாம்

 

இதன் மூலமாக குடும்ப சமநிலை பாதுகாக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயம் வலிமை மிக்க சமுதாயம் உருவாக்க வாய்ப்பு உண்டாகும்

 

இளைஞர்கள் இருபத்தைந்து வருடம் வரை பிரம்மச்சரிய வாசம் புரிந்து வருவதால் அவர்கள் திருமணம் முடிந்து தன் தாய் தந்தையாரோடு நம்பி வந்த வாழ்க்கைத்துணையை காத்து அரவணைத்து வாழ வேண்டியது அவர்கள் கடமையாகும்

 

இதுவே நம் முன்னோரின் கல்வி முறையாகும் தடம் பிறழாத வாழ்க்கை நெறியாகவும் இருந்தது

 

இந்த முறையான பல பல ஆயிரம்  ஆண்டுகள் நிரூபிக்கப்பட்ட நம்முடைய முறையான   கல்வி முறைக்கு வாய்ப்பும் அதிகாரமும் இருக்கும்  அனைவரும் உதவ  முன்வந்தால் நிச்சயம் வலிமை மிக்க சமுதாயம் மீண்டும் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

போட்டிகள் நிறைந்த இந்த கலியுக வாழ்வில் வெற்றி அடைய செய்ய அபரிமிதமான ஆற்றலும் அறிவும் இறைவனின் துணையும் நமக்கு தேவைப்படுகிறது

 

நம்முடைய உடலில் உணவின் மூலமும் பஞ்ச பூதங்களின் மூலமும்  உற்பத்தி ஆகும் ஆற்றலானது பல்வேறு மாற்றங்களுக்கு பின்பு இறுதியில் உயிரனுக்காளாக மாற்றம் பெறுகிறது

 

இவ்வாறு மாற்றம் பெரும் உயிரணுக்கள் முறையான கல்வியால் மேம்படுத்தாவிடில், பெண்களோடு இணைந்து வாழும் உலகில் இயல்பாக விந்து சக்தியாக மாற்றம் பெற்று விடுகிறது,  விந்து சக்தியாக மாற்றம் பெற்ற அந்த ஆற்றலானது  மூலாதார சக்கரத்தில், இடுப்பு பகுதியில்  சூழ்ந்து இருப்பதால்  காமம், போட்டி, பொறாமை, வஞ்சம், கவலை, பயம் போன்ற உணர்வுகளும்  அது சார்ந்த கீழ்நிலை  எண்ணங்களும் அதிகமாக வர  காரணமாகிறது

 

கீழ்நிலை எண்ணங்கள் என்பது எப்போதும் எதிரபாலினத்தோரை சார்ந்தே வாழ்வது, அடுத்த மனிதர்களிடம் சார்ந்து இருப்பது, சுய சிந்தனை அற்று இருப்பது, நினைவு திறன் குறைந்து இருப்பது போன்ற பலவீனத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது

 

நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் அல்லது நாம் மேற்கொள்ளும் உறுதிப்பாடும் சங்கல்பமும் முதலில் நம்முடைய மூளையின் மூலம் காந்த உடலின் ஜீவகாந்த களத்தில் பதிவாகிறது பின்பு அது நம்முடைய கரு மையத்தில் அதாவது உயிரணுக்களில் பதிவாகிறது

 

நாம் சுய இன்பத்தாலோ, இனப்பெருக்க செயல்பாடுகளாலோ  உயிரணுக்களை வீணாக்க தயாராகும் போது உடலானது தன்னிடம் உள்ள அதி வலிமை வாய்ந்த அனைத்து உயிராணுக்களையும் அடுத்த தலைமுறை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  அனுப்பி வைத்து விடுகிறது

 

இதனால் நாம் மிகவும் பலவீனம் அடைந்து நினைத்த எந்த எண்ணத்தையோ  கொடுத்த எந்த வாக்குறுதியையோ நிறைவேற்றும் சக்தி குறைந்த மனிதர்களாக மாற்றமடைகிறோம்

 

ஆறு ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு ஒரு நொடியும் புதிய புதிய நீர் திவலைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது, அது போலவே நம்முடைய மனம் நம்மோடு இருக்கிறது என்றாலும் ஒவ்வொரு நொடியும் உடலில் இருக்கும் உயிரணுக்களின் சூழற்சியினால் உற்பத்தியாகும் காந்த ஆற்றல் மனமாக மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது

 

இதனால் ஆற்றின் பிரவாகம் போல புதிது புதிதாக உற்பத்தியாகும் எண்ணங்கள் பழைய லட்சியங்களின் இருப்பை பலவீனம் அடைய செய்து விடுகிறது,  பழைய உயிரணுக்கள் விந்து சக்தி மூலமாக வீணாக்குவதன் மூலமாக நாம்   மன உறுதி அற்ற மனிதனாக மாற்றம் அடைகிறோம்

 

மன உறுதி அற்ற மனிதன் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலுமா?  பெரிய பெரிய லட்சியங்களை கொண்ட மனிதர்கள் பிரம்மச்சரியத்தில் நிலைத்த காரணத்தினாலேயே அதை சாதிக்க முடிந்திருக்கிறது

 

மூவுலகையும் வென்ற ராவணனின் மகனான இந்திரஜித்தை  வீழ்த்த லட்சுமணன் பன்னிரண்டு வருட பிரம்மசரிய வாழ்க்கையே துணை நின்றது

 

உயர்ந்த லட்சியங்களை அடைய துடிக்கும் மனிதனுக்கு பிரம்மசரியத்தை விட உற்ற துணை வேறெதுவும் இல்லை

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத் தனையது உயர்வு”

 

திருவள்ளுவர் மனதின் பெருமையை உணர்த்த வாழ்வை உயர்த்த எவ்வளவு அழகாக இந்த  குரளில் உணர்த்தியுள்ளார்! நம் மனதின் உயர்வு எதுவோ அதுவே நம்முடைய வாழ்வின் உயர்வு

 

இதில் இன்னொரு மிகப்பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது மனதின் உயர்வு என்றால் பலரும் வெறும் எண்ணங்களின் உயர்வு என்றே தவறாக எண்ணிக் கொண்டுள்ளனர்!

 

எண்ணங்களின் உயர்வு என்பது சிறப்பு தான் சரிதான் ஆனால் அந்த எண்ணங்களுக்கான வலிமை என்பது மிக முக்கியம்  அது தான் உண்மையான உயர்வு,

 

உயர்வான எண்ணங்கள் வைத்திருந்தாலே ஒருவன் வலிமை அடைந்து விட முடியாது, அப்படி எனில் மன வலிமை எவ்வாறு பெறுவது எப்படி?  எண்ணங்களுக்கும் மனதுக்கும் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?

 

உதாரணமாக நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு வெளிச்சம் தெளிப்பானின்(Tourch  light) உள்ளே   பேட்டரி உள்ளது அதில் ஒளிரும் விளக்கும் உள்ளது!  ஆனால் அந்த பேட்டரியில் ஆற்றல் இருந்தால்தானே அது பிரகாசமாக நீண்டதூரம் எரியும்?

 

அதுபோலவே உள்ளத்தனையது உயர்வு என்று திருவள்ளுவர் கூறுவது உள்ளத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்ற கருத்தும் பொருந்தும் அல்லவா?

 

சரி நம்முடைய மனமானது எப்படி இயங்குகின்றது என்று ஆழ்ந்து சிந்திப்போம்

 

நாம் உண்ணும் உணவானது பல்வேறு தன் மாற்றங்கள் அடைந்து பல்வேறு கட்டங் களுக்குப் பிறகு உயிர் அணுக்களாக மாறுகிறது ஒவ்வொரு அணுவும் அதன் இயல்பு என்பது தன்னைத் தானே சுழன்று கொண்டிருப்பது ஓரணு தன்னைத்தானே வேகமாக சுழலும் போது அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் காந்த ஆற்றல் எனப்படுகிறது

 

எவ்வாறெனில் ஒரு காற்றாடி ஆனது வேகமாக சுழலும் போது அதிலிருந்து காற்று வெளிப்படுவதை போல

இதுபோலவே நம்மால் அபரிமிதமாக உற்பத்தி ஆகும் நம் உயிரணுக்கள் சுழன்று காந்த ஆற்றல் வெளிப்படும் பொழுது அந்த காந்த ஆற்றலானது கண்களின் வழியாக பார்வையாகவும், மூக்கின் வழியாக மணமாகவும், வாயின் வழியாக சுவையாகவும் சத்தமாகவும். காதின் வழியாக  கேட்கும் திறன் ஆகவும், உடலில் வலி மற்றும் உணர்வுகளாகவும், மனதின் வழியாக எண்ணங்கள் ஆகவும் வெளிப்படுகிறது

 

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் மனதிற்கான ஆற்றல் நம்முடைய உயிரணுக்களில் இருந்து வெளிவருகிறது கிடைக்கிறது என்று கொள்ளலாம்

 

மனதிற்கான ஆற்றல் உயிரணுக்களில் இருந்து வருகிறது என்றால் அந்த உயிரணுக்களை நாம் இனப்பெருக்க செயல்பாடுகளிலும் சுய இன்பத்தில்  விந்து சக்தியாக மாற்றி வெளியேற்றி விட்டால் நம் மனதில் வலிமை எங்கிருந்து கிடைக்கும்?

 

சில நிமிட இன்பத்திற்காக நாம் இப்படி உயிராற்றலை வீணாக்கி விடுவதினால் சிறிது காலம் இன்பமாக இருக்கலாம் ஆனால் உண்மையான வலிமைக்கு எங்கே செல்வது?

 

விந்து சக்தியாகிய உயிர் ஆற்றலை நாம் வீணாக்கிய உடன் உடலானது பலவீனமாக இருப்பதையும், மனம் தளர்ந்து விடுவதையும் இயல்பாக  ஒவ்வொரு ஆண்மகனும் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும் இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!

 

விவேகானந்தர் கூறுவார் நாம் வலிமை அடைய இந்த உலகத்தில் பிறந்து உள்ளோம் என்று!  ஆனால் நாம் வலிமை அடைந்து கொண்டிருக்கிறோமா?

 

பிரம்மச்சரியத்தில் நிலைக்க நிலைக்க வலிமையானது படிப்படியாக நம் மனதிற்கு உற்ற துணையாக வந்து சேரும்

 

நான் தியானம் செய்கிறேன் தவம் செய்கிறேன் எனக்கு மனவலிமை கண்டிப்பாக கிடைத்து விடும் அல்லவா பிரம்மசரியம் அவசியம்தானா என்று பலர் கேட்கிறார்கள்?

 

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக கூறுவார் நாம் எண்ணும் எண்ணங்கள் நம்முடைய இலட்சியங்கள் நாம் பார்க்கும் விஷயங்கள் கேட்கும் விஷயங்கள் மற்றும் ஐம்புலன்கள் வழியாக நாம் உணரும் அனைத்துமே நம்முடைய காந்தத்தில் பதிவாகி நம்முடைய கருமையத்தில் சென்று ஒரு பிளாக் பாக்ஸ் விமானத்தில் இருப்பதைப் போல பதிவாகிறது என்று கூறுவார்!

 

அவ்வாறு நம்முடைய எண்ணங்கள், நம்முடைய விந்து சக்தியின் மூலமான உயிரணுக்களில் கருமையத்தில் பதிவாகிறது என்றால் அதை நாம் விந்து சக்தியாக வீணடித்து விடும்பொழுது அவ்வாறு பதிவான அனைத்து எண்ணங்களும்  மறைந்து பலவீனம் அடைந்து விடும்  அல்லவா?

 

இதுதான் நம்முடைய இளைஞர்கள் தற்காலத்தில் அனுபவித்து வருகிறார்கள் அதாவது பிரம்மச்சரியத்தை உணர்த்தாத கல்வி முறையில் நாம் ஒருமுறை ஒரு பக்கம் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறோம் மற்றொரு பக்கம் உயிரணுக்களை வீணாக்கி கொண்டே இருப்பதனால் நாம் கற்ற கல்வியானது நமக்குள்ளே பதியாமல் அது ஓட்டைப் பானையில் ஊற்றும் தண்ணீரை போல ஒழுகி வீணாகிக் கொண்டிருக்கிறது கல்வி நிறுவனங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது மாணவர்களுக்கான அறிவியல் தளங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன ஆனால் ஒருவரும் அதனைத் தன் மனதில் நிறுத்தி மேம்பாடு அடைய இயலவில்லை

 

தியானம் தவம் செய்யும் போதும் இதே நிலைமை தான் நாம் பெற்ற வரங்கள் நாம் ஈட்டும் செல்வங்கள் அனைத்துமே விந்து சக்தி வழியாக அடுத்த தலைமுறைக்கு உடலானது கொண்டு செல்கிறது அதை முறையற்று வீணாக்கிவிட்டால் யாருக்கு என்ன பலன்?

 

ஆகவே சகோதரர்களே நாம் தியானத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றாலும் கல்வியில் வெற்றியடைய வேண்டும் என்றாலும் மனதில் வலிமை அடைய வேண்டுமென்றாலும் வாழ்வில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்றாலும் நமக்கு இருக்கும் மிகச் சிறந்த மிக உயரிய ஆயுதம் ஈடுஇணையற்ற ஆயுதம் நம்முடைய உயிரணுக்களை பிரம்மச்சரிய வழியில் பாதுகாப்பதன் மூலமும் அதனை முறையான சித்தர் பயிற்சிகளால் நிலைப்படுத்துவதன் மூலமுமே உண்மையான சாத்தியம்!

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

இயற்கையில் தாவரங்கள்  இப்பூமியில் உள்ள அனைத்து சக்திகளையும் சூரிய ஒளியையும் எடுத்துக் கொண்டு தன்னையும் காத்து தன்னுடைய இனத்தையும் பெருக்க பூக்களையும் பழங்களையும் கொடுத்து, ஒட்டு மொத்த உலகுக்கும் உணவினை கொடுக்கும் அன்னையாகவும் இருக்கிறது, பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறது

 

உதாரணமாக ஒரு மாமரத்தில் இறுதி விளைவாக பழங்கள் வருகிறது இந்த பழத்தில் கொட்டைகள் இருக்கிறது அதனுள் மாமர விதை இருக்கிறது அந்த விதையே மாமரத்திற்கு தன்னுடைய இனத்தை பெருக்குவதற்கான மூல ஆதாரம்,

 

தன்னுடைய இனத்தை மட்டும் பெருக்க வேண்டும் எனும் சுயநலம் அதனிடம் இல்லை அதனாலேயே மாமரம் வெறும் விதைகளை மட்டும் கொடுக்காது அதனோடு இனைந்து,  பிற உயிர்களுக்கும் வாழ்வளிக்கும் உணவாக மாம்பழத்தை சுற்றியுள்ள தோல் அதை அதனோடு இணைந்த சதைப்பற்று அதனோடு இணைந்த நறுமணம், அதில் அடங்கிய இனிப்பு சுவை என தனக்குள்ளாக தன்னை மேம்படுத்திக் கொண்டு கனிகளாக வெளித் தள்ளுகிறது

 

அது போலவே நாமும் நாம் உண்ணும் உணவானது பிரபஞ்ச பஞ்ச பூதங்களை ஈர்த்து இறுதி விளைவாக நம்முடைய உயிரணுக்கள் மற்றும் விந்து சக்தியாக இறுதியில் வெளிப்படுகிறது!…

 

ஓரறிவு கொண்ட தாவரத்துக்கே உலகுக்கு பயன்படும் கனிகளை தர இயலும் எனில்  ஆறு அறிவு கொண்ட நாம் நம்முடைய விந்து சக்தியை துணையாக கொண்டு வீண் விரயம் செய்யாது  எவ்வளவோ சாதனைகளைச் செய்ய  இயலும்

 

மனித இனமும் தன்னை நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொண்டு தன்னிடம் உள்ள எந்த ஒரு சிறந்த விஷயத்தை இந்த உலகத்திற்கு கொடுக்க இயலும் என்று ஆராய்ந்து இவ்வாறு ஆராய்ந்து பெற்ற ஆராய்ச்சியின் பலனாகவே பிரம்மச்சரிய கல்விமுறையை வடிவமைத்தார்கள்

 

முந்தைய காலங்களில் ஒட்டுமொத்த கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பிரம்மச்சரிய ஒழுக்கத்திற்கு அதிக  முக்கியத்துவம் அளித்தார்கள்

 

தற்காலத்தில் பிரம்மச்சரிய/ கற்பு ஒழுக்க பழக்கவழக்கங்களை போதிக்கும் பாடத்திட்டங்கள் பள்ளிகளிலிருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டது, அல்லது ஒழுக்கம் என்பது உடை உடுத்துவது, நடப்பது உணவு உண்பது என்பது மட்டுமே என்று ஆகி விட்டது!

 

ஆனால் நம் முன்னோர் அக்காலகட்டத்தில் உண்மையான சுய ஒழுக்கங்களை மட்டும் அடிப்படையாக வைத்து மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய, அமைதியும் சமுதாய மேன்மையும் நிறைந்த  கல்வி முறைகளை தொகுத்து வாழ்ந்தனர்

 

இதுதான் நம்முடைய பாரத தேசத்தில் பண்டைய கால சிறப்பு நம்முடைய முன்னோர்கள் பல இழப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பிறகு பிரம்மசரிய கல்விமுறையை உருவாக்கி போதித்து வந்தனர்,

 

நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலும் வெளியுலக ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட நம் உள்ளாக தன்னை மேம்படுத்தும் தனக்குள்ளாக இருக்கும் சக்தியை வெளிக் கொணர்தல் அதன் மூலம் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கு கூட பயன்படும் படியாக   என்ன நன்மை செய்யலாம் என்று ஆழ்ந்து  சிந்தித்தனர்

 

தற்காலத்தில் பெரும்பாலும் கல்வி வணிக சூழ்நிலைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் நிலையில் நாம் இல்லாது இருந்தாலும், குறைந்த பட்சம் சுய ஒழுக்கம், கற்பு நெறியில் நிலைத்து வாழ்வது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

 

பாலகர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் பத்து வருடங்கள் கடக்கும் போது மூளையானது போதுமான வளர்ச்சி பெற்றவுடன், உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றலானது முதுகு தண்டு வழியாக கீழிறங்கி இனப்பெருக்க பாகத்தை அடைகிறது,

 

அதாவது பத்து ஆண்டுகளுக்கு மூளைக்கான கட்டமைப்பு முடிந்தவுடன் மேலும் பத்து ஆண்டுகள் உடலினை கட்டமைக்க உயிராற்றலானது முதுகு தண்டு வழியாக மூலாதார சக்கரத்தை அடைகிறது, உடலின் வளர்ச்சியானது 25 வயது வரை நீடிக்கும்

அச்சமயத்தில் தூய பிரம்மச்சரியத்தில் ஒழுங்காக வளரும் ஆணோ பெண்ணோ முழுமையாக உடல் மன அளவில் வலிமை மிக்க வளர்ச்சி பெறுவார்கள், தகுந்த குருவின் துணையோடு கல்வி வாழ்வை துவங்குபவர்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெறுவார்கள்

 

ஒரு நல்ல சமுதாயத்தில்  வயதுக்கு வந்து பருவம் எய்திய ஒவ்வொரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஆரம்ப கால கட்டங்களிலேயே உடல் மாற்றங்களுக்கான காரணம், உயிர் சக்தியின் பெருமையும் முக்கியத்துவமும் உணர்த்தப்படுவது அவசியம்

 

பிரம்மச்சரியத்தில் நிலைத்து ஒழுக்கமாக வாழ வேண்டும் மேலும் அதனால்  உண்டாகும் பலன்களையும் அந்த ஞானத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே  பருவம் வந்த நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி மகிழும் பழக்கம் நம்மிடம் இன்றளவும் இருக்கிறது!

 

இப்போது நாம் உண்மையில் செய்வது என்ன ? பருவ வயதின் முக்கியத்துவம் புரியாது போனதால்  தற்காலத்தில் எல்லாம் வெறும் சடங்காக மாறி விட்டது

 

குறிப்பாக ஆண் குழந்தைகள் 12 வயது வரை உடலின் மொத்த ஆற்றலும் மூளை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் நம்முடைய முன்னோர்கள் அக்காலத்தில் பெற்றோர்களுடன் கழிக்க வேண்டும் என்று விதித்திருந்தார்கள்

 

அச்சமயத்தில் ஒவ்வொரு பாலகனும் உறவுகள் மற்றும் சுற்றத்தாரின் வாழ்க்கை முறை, பெற்றோரின் தொழில்களை உடனிருந்து சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தார்கள் 12 வயதுக்கு பிறகு நம் முன்னோர்கள் ஆய கலைகள் 64 என வடிவமைத்து குருகுலங்கள் மூலம் போதித்தார்கள், இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது இயல்பான அன்பும் சமுதாயத்தின் மீது அக்கறையும் சமமாக உயர்ந்தது

 

அதாவது உடலில் உற்பத்தியாகும் காம ஆற்றலானது மடை மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு திறமைகள் உலகிற்கு பயனளிக்கும் விதமாக சரியான பயிற்சி அளிக்கப்பட்டு குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள்

 

உண்மையான பிரம்மச்சரிய கல்வி முறையாலேயே  நம்முடைய பாரத தேசத்தில் காலத்தால் அழியா புகழ் பெற்ற ஆயிரக்கணக்கான குருமார்களும் அவர்கள் மூலம் லட்சக்கணக்கான அறிவு செறிந்த  புத்தகங்கள் வேதங்கள் உபநிஷத்துக்கள் புராணங்கள் மந்திரங்கள்  சிற்பங்கள்  கோவில்கள் எல்லாம் உருவானது

 

தற்காலத்திலோ பெரும்பாலும் இளைஞர்கள் 12 வயதுக்கு மேல் உற்பத்தியாகும் உயிராற்றலை சுய இன்பம் போன்ற பழக்க தோஷத்தால் வீணாக்கிவிட்டு போதுமான அளவு உடல் வளர்ச்சி இல்லாமல், உடல் அளவிலும் மன அளவிலும் பாதிப்படைகிறார்கள்

 

சாதாரணமாக உடல் வளர்ச்சிக்கு தேவையான உயிரணுக்களின் உற்பத்தி இந்த 12 முதல் 25 வயது வரை அபரிமிதமாக, அதாவது இரண்டு மடங்கு ஆற்றல் உற்பத்தி இந்த வயதுகளில் இருக்கும்

 

இச்சமயத்தில் பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் இளைஞனுக்கு சரியான கல்வி கிடைத்தால்  மிக வலிமை மிகுந்த மனிதனாக சமுதாய பொறுப்புகள் உணர்ந்த மனிதனாக  நல்ல பழக்க வழக்கங்களை உள்வாங்கும் திறன் பெற்ற மனிதனாக உருவாவது உறுதி

 

தற்காலத்தில் அந்நிய கல்வி மோகத்தாலும், ஆடம்பர வணிக முன்னேற்ற ஆசைகளாலும் உண்மையான  பிரம்மச்சரிய சக்தியை சரியான விதத்தில் மடை மாற்றம் செய்யும் கல்வி முறைகளை இழந்து உள்ளோம்,

 

ஓரணு முதல் பரிணாம வளர்ச்சி அடைந்து படிப்படியாக ஆறறிவு ஆகி மனிதன் வரை வந்த பரிணாம வளர்ச்சியானது  இதோடு நின்று விடலாமா? தற்போது ஐந்தறிவு ஜீவன்களுக்கு உள்ள கட்டுப்பாடு கூட இல்லாமல் மனித இனம் பலவீனம் அடைந்து வருகிறது

 

நம் முன்னோர்களும் சித்தர்களும் மனித இனம் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு செல்ல தேவையான பல்வேறு ரகசியங்களை நமக்கு அருளிச் சென்றார்கள் அதை அடைய நாம் பிரம்மச்சரிய வாழ்க்கையில் நிலைப்பது மிக அவசியம், இவ்வாறு நிலைக்கும்போது திருமூலர் அருளிய  விந்து ஜெயம் போன்ற பயிற்சிகள் மூலம்  நம்மை மேலும் வலிமைப்படுத்தி உயர் நிலைக்கு செல்லலாம்

 

ஆகவே ஒரு ஒரு ஆணும் ஒழுக்கத்தில் நிலை பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஒரு ஒரு பெண்ணும் கற்பு நெறியில் நிலைத்து வாழ வேண்டியது அவர்களுக்கு நன்மை பயக்கும்

 

இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இதைப் பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறுவது ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முக்கியமான கடமையாகும் மேலும் இதுபோன்ற பிரம்மச்சரிய சக்திகளைப் பற்றி உணராத பலருக்கும் நண்பர்களுக்கும் நாம் உணர்த்த வேண்டியது நம்முடைய எதிர்காலத்திற்கு மிக இன்றியமையாததாகும்

 

இனப்பெருக்க பாகங்கள் இறைவனுக்கு இணையாக போற்ற வேண்டும் என நம் முன்னோர்கள் உணர்த்த காரணத்தினாலேயே சிவத்துக்கு லிங்க வடிவம் செய்து வழிபாடு செய்யும் நடைமுறையை கொண்டுவந்தனர், அண்டத்தில் சிவமாக இருப்பது நம் உடலில் உயிராக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், இனி ஆயினும் உண்மை பிரம்மச்சரிய சக்தியை பற்றி போதித்து ஒழுக்கமான வழிகளில் குழந்தைகளை வளர்க்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

நம்முடைய உடலில் ஆற்றல் இழப்பு முக்கியமாக பின்வரும் ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது

 

  • ஐந்து புலன்கள்

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு போன்றவற்றால் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது

 

  • மனதின் வழியாக

கவலை, பயம் கோபம், பேராசை, தேவையற்ற எண்ணங்கள், கற்பனைகள், காம எண்ணங்கள் என மனதின் வழியாக அபரிமிதமான ஆற்றலானது வீணாகிறது

 

  • இனப்பெருக்கம்

விந்து சக்தி மூலம் வாரிசுகளை உருவாக்குவதற்காக அபரிமிதமான உயிரணுக்கள் அழிக்கப்பட்டு ஆற்றல் வெளியேறுகிறது

 

  • உணவு 

உடலுக்கு பொருந்தாத உணவுகள் எடுத்துக் கொள்ளும் போதும் அதனை செரிமானம் செய்யும் முயற்சியிலேயே உடலில் பெரும்பாலான ஆற்றல் இழப்பு உண்டாகிறது

 

  • உடலுழைப்பு 

உடலுழைப்பு அளவுக்கு மீறி செல்லும் போது ஆற்றல் இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனம் அடைகிறது

 

மேற்கண்ட ஐந்து வழிகளில் ஆற்றல் அபரிமிதமாக பல்வேறு சூழ்நிலைகளில் வீணாகிறது அவ்வாறாக வீணாகும் ஆற்றல்கள் முறையான வழியில் சீரமைத்தால் நாம் ஒவ்வொருவரும் அபரிமிதமான சாதனைகள் புரிய இயலும்,

 

இதையே திருவள்ளுவர் ஆமை தனக்கு ஆபத்து வரும் காலங்களில் எல்லாம் தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் தலையை  (ஐந்து உறுப்புகள்) தன்னுடைய ஓட்டின் உள்ளே இழுத்து காத்துக்கொள்ளும், அதுபோல நாமும் நம்முடைய ஐந்து புலன்களால் வீண் ஆகும் ஆற்றல்களை நமக்குள்ளாக சேமித்து கொள்ளும் வழி அறிந்தவர்களுக்கு அடுத்தடுத்து வரும் ஏழு தலைமுறை வாரிசுகளுக்கும் வலிமையும் ஆற்றலும் தங்கும் என்கிறார்

 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 

எழுமையும் ஏமாப் புடைத்து 

 

ஐம்புலன்கள் வழியாக காந்த ஆற்றலானது விரயம் ஆனாலும் அதனிலும் மேலாக காமத்தின் மூலம் சுய இன்பத்தாலும் இனப்பெருக்க செயல்பாடுகளாலும் வீணாகும் ஆற்றல் மிக மிக அதிகம்

 

ஒரு ஆற்றலானது மற்றொரு ஆற்றலாக மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும் இது இயற்கையின் நியதி,

 

பிரம்மச்சரிய வழியில் விந்து சக்தியை வீணாக்காமல் இருக்கும் போது நம்முள் உற்பத்தியாகும் அபரிமிதமான உயிராற்றல் காந்த ஆற்றலாக மாறி ஐந்து புலன்கள் வழியாக வெளியேற வாய்ப்பு உண்டாகும்,  அவ்வாறு வெளியேறும் ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்

 

சாதாரணமாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஒரு இளைஞன் பிரம்மச்சரியத்தில் இருந்தால் பல மணி நேரம் சோர்வின்றி பார்த்துக் கொண்டிருப்பான் இது போன்ற சமயங்களில் நாம் எச்சரிக்கையாக பிரம்மச்சரிய ஆற்றலை பயனுள்ள வழிகளில் திருப்ப வேண்டும்

 

அதற்காகவே நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விதமான யோக தியான பயிற்சிகள் வடிவமைத்து கொடுத்துள்ளனர், அவற்றை நாம் நம்முடைய பயிற்சியாகவும் செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக விந்து ஜெயம், காந்த தவம் சூரிய தவம், என பல பயிற்சிகளை தொகுத்து celibacy.in இணையத்தில் celibacy.in இணையத்தில் கொடுத்துள்ளோம்

 

இவ்வாறு அபரிமிதமாக வீணாகும் ஆற்றல்கள் காக்கப்படும்போது காந்த ஆற்றல் மிக்க மனிதர்களாக, வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைக்கும்  மனிதர்களாக, பிறவியின் நோக்கத்தை உணர்ந்து சாதிக்கும் மனிதர்களாக நிச்சயம்  மாற முடியும்

 

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

நாம் எப்போதாவது இன்பமாக இருக்க வேண்டுமா? அல்லது எப்போதுமே இன்பமாக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

 

நாம் இந்த உலகத்தில் எப்போதும் நிரந்தர இன்பத்தோடு ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதன் வரையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறோம்

 

உண்மையான இன்பத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற அடிப்படை புரிதல் வேண்டும்

 

நாம் உண்ணும் உணவும் பஞ்ச பூத பிரபஞ்ச சக்தியும் இணைந்து நம்முடைய உடலில் உயிர் அணுக்கள் உற்பத்தி ஆகிறது, அதாவது ஒரு மாமரத்தில் அதனுடைய சத்துக்கள் அனைத்தும் இணைந்து இறுதியாக மாம்பழம் வருவது போல் நம்மிடம் நம்முடைய சக்திகள் அனைத்தும் இணைந்து உயிரணுக்கள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி உள்ளது

 

உடல் முழுதும் உயிரணுக்களும் அது விரிவு பெற்று உயிராற்றலும்  பரவி இருந்தாலும் அதன் இயக்க மையம் என்பது மூளை மற்றும் இடுப்பு பகுதியை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது

 

எந்த ஒரு அணுவும் இயல்பாகவே சுழலும் தன்மை கொண்டு இருப்பதால் அந்த இயக்கத்தின் விளைவாக காந்த ஆற்றல் விரிவடைகிறது,

 

அதுபோலவே நம்முடைய உயிரணுக்களின்  இயக்கத்தின் காரணமாக ஜீவ காந்த ஆற்றல் உற்பத்தி ஆகிறது, நம்மில் இருந்து வெளிப்படும் ஜீவ காந்த ஆற்றலானது  ஐம்புலன்கள் வழியாக வெளியேறும் போது பார்க்கும் திறன், கேட்கும் திறன்,  நுகரும் திறன், சுவைக்கும் திறன்,  உணரும் திறன் பெறுகிறோம், மேலும் காந்த ஆற்றலானது விரிவடைந்து மூளையின் வழியாக  மனமாகவும் வெளிப்படுகிறது

 

இந்த காந்த ஆற்றலை சூட்சும தேகம் அல்லது ஜீவ காந்தம் என பல பெயர்களில் அழைக்கிறோம்

 

எவ்வாறு மின்சாரமானது அது வெளிப்படும் சாதனங்களுக்கு தகுந்தாற்போல வித விதமான பலன்களை தருகிறதோ, அது போலவே நம் உடலின் ஜீவகாந்த ஆற்றலானது வெளிப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப நமக்கு பயன் அளிக்கும் திறனாக வெளிப்படுகிறது

 

நம் உடலில் உள்ள இந்த ஜீவ காந்த ஆற்றல் புலன்கள் வழியாகவும் மனதின் வழியாகவும் செலவாகும் போது நமக்கு தற்காலிக இன்ப துன்ப உணர்வு கிடைக்கிறது, அதை  சிற்றின்பம் என்று அழைக்கிறோம்!

 

உதாரணமாக நாம் ஒரு இனிப்பு பண்டம் அதாவது ஜிலேபி என்று வைத்துக் கொள்வோம் முதல் ஜிலேபி சாப்பிடும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது சாப்பிடுகிறோம் மிக மிக சுவையாக இருக்கிறது நமக்கு கிடைத்த அந்த சுகம் நம்முடைய நாக்கிலிருந்து கிடைத்ததா அல்லது ஜிலேபியில் இருந்து கிடைத்ததா?

 

சரி மேலும் இன்னும் ஒரு பத்து ஜிலேபி சாப்பிடுவோம் இப்போது பத்தாவது ஜிலேபி சாப்பிடும் போது அது முதல் ஜிலேபி யில் கிடைத்த அதே இன்பத்தோடு இருக்கிறதா?

 

பத்தாவது ஜிலேபி சாப்பிடும்போது நாவினில் சிறிதளவு சுவையும் தென்படவில்லை அதாவது ஒரே வகையான இனிப்பு பண்டம் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு சுவையாகவும் இறுதியாக சாப்பிடும் போது சுவை அற்று துன்பமாக மாறி விடுகிறது

 

இதிலிருந்து நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம் சுவையானது நம்முடைய நாவின் காந்த ஆற்றல் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிறது ஆகவே ஜிலேபி என்பது வெறும் தூண்டுதல் பொருளே

 

அது போலவே உலகத்தில் எந்த ஒரு பொருளின் மூலம் நாம் இன்பம் பெறுகிறோம் என்று நினைத்தாலும்  அது நம்முடைய காந்த ஆற்றல் வெளியேற்றத்தால் நம்மில் இருந்தே அந்த இன்பத்தை பெறுகிறோம்… பாலின்பம் என்பதும் இதே தான்

 

இவ்வாறு நாம் வெளி பொருட்களின் மூலம் நம் உடலில் உள்ள காந்த ஆற்றலை விரயம் செய்து அப்போதைக்கப்போது இன்ப துன்ப உணர்வுகளை பெறுவது சிற்றின்பம் எனப்படுகிறது

 

பேரின்பம் என்பது எவ்வாறு ஐம்புலன்கள் வழியாக, விந்து சக்தியின் வழியாக காந்த ஆற்றல் வீணாகிறது என்று ஆராய்ந்து,  வீணாகும் காந்த ஆற்றலை நம் உடலில் சேமித்து சரியான பாதையில் ஆற்றலை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு திருப்பி எப்போதும் இன்பமாக மகிழ்வாக நிறைந்த ஆற்றலோடு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ நம்மை மேம்படுத்திக் கொள்ளும் உயர்ந்த வாழ்க்கை முறையாகும்,

அதற்காகவே நாம் பிரம்மச்சரிய தியான யோக பயிற்சிகளை வடிவமைத்து தகுந்த வகையில் பயிற்சிகள் அளித்து வருகிறோம்

 

உண்மையில் பேரின்பத்தில் இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை, நமக்குள்ளே நாம் நிலைத்து இருந்தால்  யோக தியான முறைகளில் நம்மை மேம்படுத்துவதற்கும், சமுதாயத்துக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் பிரம்மச்சரியம் பெருமளவு துணை புரியும்

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

பிரம்மச்சரிய ஒழுக்க வாழ்வின் மேன்மையை உணர்ந்த முன்னோர்கள் ஆண்களுக்கு பிரம்மச்சரிய கல்வியின் முக்கியத்துவத்தையும் சன்னியாத்தின் மேன்மையையும் உணர்த்தி வளர்த்தார்கள், சிற்றின்பங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து  அனுப்பப்பட்டார்கள்

 

சிற்றின்பத்தை விரும்பாத பிரம்மச்சரியத்தில் நிலைக்கும் வலிமை மிக்க ஆண்களுக்கு  பேரின்பத்தில் நிலைக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்கள் அவர்கள் மூலமாக  பல்வேறு கலைகளை மேம்படுத்தி அது சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பயன்படும்படி செய்தார்கள்

 

சமுதாயத்தில் மிக வலிமை படைத்த வீரனாக பிரம்மச்சரிய வீரனே திகழ்ந்தான் மிகவும் சக்திவாய்ந்த மருத்துவராக பிரம்மச்சரியத்தில் நிலைத்த மருத்துவரே திகழ்ந்தார் இதுபோல 64 கலைகளிலும் பல உதாரணங்களை எடுத்துக் கூற இயலும் ஏனெனில் அவர்கள் தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை வீணடிக்காது மற்றொரு ஆற்றலாக மாற்றம் செய்யும் திறனை உன்னதமான பிரம்மச்சரிய கல்வி முறையால் பெற்றிருந்தார்கள்

 

அவ்வாறு பிரம்மச்சரியத்தில் நிலைத்த ஆண்களுக்கு அவர்களின் தியாகத்திற்கு  குடும்பத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மிகுந்த மரியாதை கொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அபரிதமான காந்த ஆற்றலின் ஆசியைப் பெற்று பூ உலகையே சொர்க்கமாக மாற்றினார்கள்

 

ஆண்கள் அனைவரும் சன்யாசம் பெற்று பிரம்மச்சரிய வாழ்வுக்கு சென்றுவிட்டால் பெண்களின் நிலை என்ன? இந்த கேள்வி சாதாரணமாக என் வார்த்தைகளை  படிக்கும்போது  கேட்கும்போது போது தோன்றும் அது இயல்பானதே

 

மற்ற ஜீவராசிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், எல்லா  உயிரினங்களிலும் ஒரே ஒரு ஆண் மிருகம் இருந்தால் அதனை சுற்றி பல பெண் மிருகங்கள் சூழ்ந்திருக்கும் அதற்குக் காரணம் உயிரின படைப்பில் ஒரு ஆண் மிருகத்தால்  பல லட்சக்கணக்கான உயிர் அணுக்களை விந்து சக்தி மூலம் வெளியேற்ற இயலும் ஆனால் பெண் மிருகத்தால் ஒரே ஒரு கருமுட்டையை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்க இயலும்

 

ஒரு சேவல் இருந்தால் அதற்கு இணையாக பத்துக்கும் மேலான கோழிகளை விடுவதும்,  ஒரு ஆண் கிடாய் ஆடு இருந்தால் அதற்கு முப்பது நாற்பது பெண் ஆடுகள் விடுவதும், ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே ஒரு காளை மாட்டினை வைத்து ஊரிலுள்ள அனைத்து பசுமாடுகளுக்கும் சினை உண்டாக்குவதும் நம் தமிழகத்தில் விவசாயம் செய்யும்  அனைவரும் செய்யும் வழிமுறை தான், இயற்கையில் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பாகவே இந்த நிலைதான்

 

இயற்கையானது தானாகவே தனக்கான சமுதாய விதிகளை உருவாக்கி சமன் செய்து கொள்ளும்!, ஆகவே தான்  ஆண்கள் அனைவரும் குடும்ப வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் அக்கால கட்டத்தில் இல்லை…

 

ஆனால் தற்காலத்தில் தன்னை உணரும் வாய்ப்பை மறந்து  ஒவ்வொரு ஆண்மகனும் குடும்பம் நடத்தும் குடும்பி யாகவே வாழவேண்டுமென்று போதிக்கப்பட்டு உண்மைத்தன்மை உணர்த்தப்படாமல் மறக்கடிக்கப்படுள்ளது, உணர்ந்தாலும் சிறுவயது முதல் கற்ற கல்வி முறைகளால் குழம்பி உள்ளனர்

 

தற்கால பழக்கங்களால் உண்மையில் நாம் பலவீனமே  அடைந்து உள்ளோம், இயற்கையை ரட்சித்து காக்க வேண்டிய பொறுப்பை மறந்து இயற்கை வளங்களை சுரண்டி சிதைத்து எதிராக வாழும் நிலைக்கு சென்றுவிட்டோம்

 

நாம் அறிந்த வரையில் இந்த பூமி பல உயிரினங்களும் வாழ்வதற்காக படைக்கப்பட்ட ஒரே உயிர்க்கோளம், ஆனால் நம்மில் பலரும் நம் சுயநலத்துக்காக அழிப்பதற்காகவே இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது என்று வாழ்கிறார்கள்,

 

உண்மை உணர்ந்து ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்வோம் …

 

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture

மிகச்சிறந்த கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் உடைய நாடுகளின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த சமுதாயம் அக்காலக்கட்டங்களில் பிரம்மச்சரிய கல்விக்கும் நம்முடைய உயிரணுக்களை காமத்துக்காக விரயம் செய்யாது தன்மாற்றம் செய்து தன்னை வலிமை படுத்திக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததை மிக எளிதாக உணரலாம்,

 

பிரம்மச்சரியத்தை மறந்து காமத்தில் திளைத்த அரசாங்கங்கள் அதாவது அந்தப்புரம் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மன்னர்கள் அந்தந்த தலைமுறையிலேயே அழிந்து அற்ப ஆயுளோடு மரணித்த வரலாறுகள் அனேகம்

 

ஸ்பார்டன் என்ற ஒரு தேசத்தில் அவர்கள் தன்னுடைய பிரம்மச்சரிய சக்தியை முழுமையாக வீரத்திற்கு அர்ப்பணித்து உலகப் புகழ் பெற்று விளங்கினார்கள்,

நம்முடைய பாரத தேசத்தில் பிரம்மச்சரிய ஆற்றல்கள் அனைத்தும் 64 கலைகளாக  மலர்ந்தது

 

ராஜ்ஜியங்களை இழந்த மன்னர்கள் பிரம்மச்சரியத்தை துணையாக கொண்டு  இழந்த ராஜ்ஜியங்களை மீட்டெடுத்த வரலாறுகள் பாரத தேசத்தில் அதிகம்

 

பிரம்மச்சரியத்தின் மதிப்பை உணர்ந்த மனிதன் பிற உயிர்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவைகளின் சுதந்திரத்தையும் உரிமையையும் மதித்து வாழும் பண்பை இயல்பிலேயே பெற்றிருந்தான்

 

பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க துவங்கிய மனிதனுக்கே இயற்கையோடு இயைந்து வாழும் சக்தி அதிகம் என்பதால், பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும்  வலிமை சேர்க்கும் உயிரினமாக அக்காலத்தில் மனித இனமும் இருந்தது

 

தன்னுடைய உயிரணுக்களின் ஆற்றல்களை பெருமையை உணர்ந்த மனிதன் ஒழுக்கம் வாய்ந்த மனிதனாக பெண்களுக்கும் மதிப்பளிக்கும் மனிதனாக இருக்க இயலும், உண்மையாக பெண்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த மனிதரும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்க்கை நடத்துவர்

மனித இனமும் விந்து சக்தியும்

 

இயற்கையில் நாம் பாலூட்டி வகையை சார்ந்த ஒரு சக உயிரினமே , தாயும் தந்தையும் மகிழ்ந்து குலாவி பெற்ற இவ்வுடல் மூலம் உயிர் கொண்டு வாழ்ந்து வருகிறோம், நம் முன்னோர் பெண்களை நிலத்திற்கு ஒப்பிட்டும், ஆண்களின் விந்து சக்தியில் உள்ள உயிரணுக்கள் விதைக்கு ஒப்பிட்டும் வம்சாவளி மாறாது ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.

உடம்பு, உடல், பிண்டம் இவை பெண்ணின் வழியிலும், உயிர், ஆன்மா இவை ஆணின் வழியிலும் கருவில் இணைந்து ஒரு மனித பிறப்பு ஏற்படுகிறது

உடலின்றி உயிரும் உயிரின்றி உடலும் இப்பூவுலகில் நிலைத்திருக்க இயலாது இதையே நம் முன்னோர்கள் சிவனின்றி சக்தியில்லை சக்தியின்றி சிவமில்லை என்ற புராண கதைகள் மூலம் விளக்கினார்கள்

புராண கதைகளில் சிவத்தை ஆணுடனும் சக்தியை பெண்ணுடனும் சிவசக்தி என்பது ஆண் பெண் இணைந்த உருவமாகவும் உணர்த்தினார்கள்.

சித்தர் பெருமக்கள் பல படிகள் மேலே சென்று, உயிரணுக்களில் உள்ள சக்தியின் ரகசியத்தை உணர்ந்து, அதை பல்வேறு பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி, சாதாரண குடும்ப வாழ்க்கை முதல் மரணமில்லா பெருவாழ்வு வரை அனைத்துக்கும் ஆதாரம் நம்முடைய விந்து சக்தியே என உணர்ந்தார்கள்

பல ஆயிரம் ஆண்டுகள் குரு வழி பரம்பரையாக ஆராய்ந்து தன்னுடைய உடல் அழிந்தாலும் வருங்கால சந்ததிகளாகிய நாம் உண்மை உணர பல்வேறு ரகசிய மந்திர பாடல்களை எழுதியும் சூட்சமமாக வந்து பல்வேறு குருமார்களுக்கு உணர்த்தியும் சென்றுள்ளார்கள்.

இக்காலத்தில் போலியான அலங்காரம் ரசாயனங்கள் ஆடை ஆபரணங்கள் பலவற்றையும் உபயோகித்து உடலை அழகுபடுத்தி அதனை வெளி உலகத்திற்கு காட்டுவதிலேயே நாம் இன்பத்தையும் வாழ்வின் வெற்றியாகவும் காண்கிறோம்,

இந்த கீழான மன நிலையில் நம் உடலில் உள்ள உயிரணுக்களுக்கோ அதிலிருந்து தோன்றும் காந்த ஆற்றலுக்கோ மனதுக்கோ எந்த மதிப்பும் கொடுக்காமல் பலவீனமடைந்து அடைந்துள்ளோம்

இதனால் நாம் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி இன்றி கீழ் நிலை அடைந்து, பயனுள்ள வாழ்வை வாழவேண்டும் எனும் நம் முன்னோர்களின் அன்புகூர்ந்த ஆசையை மறந்து விட்டோம், நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளாவிடில் மனித இனமே அழிவின் விளிம்பில் சிக்கி இருக்கும் தற்போதைய நிலையில் இருந்து விடுபட இயலாது, விந்து சக்தியின் பெருமையை உணர்வோம், பிரம்மச்சரிய ஒழுக்கத்தில் நிலைப்போம்

🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏

celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture